{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4dkxuvtx/", "data": {"id": "4dkxuvtx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4dkxuvtx/", "kind": "article", "headword": "சீத பேதி", "romanization": "cīta pēti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:56.792082+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பெருங்குடலின் சீதச் சவ்வு அழற்சியடைந்து, சீதத்துடன் வயிழ்றுப் போக்கும் ஏற்படுவதால், இதைச் சீத பேதி (dysentery) என்பர்.", "body_ta": "பெருங்குடலின் சீதச் சவ்வு அழற்சியடைந்து, சீதத்துடன் வயிழ்றுப் போக்கும் ஏற்படுவதால், இதைச் சீத பேதி (dysentery) என்பர். இதை வயிற்று உளைச்சல் என்றும் கூறலாம். கிரேக்க மொழியில், dys என்றால், கெட்ட அல்லது கடினமான என்றும், enteron என்றால், குடல் என்றும் பொருள்.\n\nநோய்க் காரணிகள். அமீபா என்ற ஒட்டுண்ணி, ஷிகல்லா என்ற பாக்டீரியா, பலான்டிடியம் கோலை (Balantidium coli) எனப்படும் ஒட்டுண்ணி, சிஸ்டோசோமியா ஹீமட்டோபியம் எனப்படும் குடல் புழு, டிரைகோமானோஸ், கியார்டியா போன்ற புழுக்கள், வைரஸ், மலேரியா ஒட்டுண்ணி ஆகிய அனைத்தும் சீத பேதியை உண்டாக்கலாம். மலத்தை ஆய்ந்து காரணியைக் கண்டு பிடித்து, உரிய மருத்துவம் அளிக்க வேண்டும்.\n\nஅமீபா சீத பேதியில் என்டமீபா ஹிஸ்டாலிட்டிகா என்ற ஒட்டுண்ணி, குடல் சவ்வினுள் நுழைந்து புண்களை உண்டாக்குகிறது. வயிற்றுப் போக்குடன், குருதியும், சதமும் வெளிப்படுகின்றன. வயிற்று வலி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல் போன்றவை தோன்றுகின்றன. மலக் குடலில் புண் உண்டாகியிருந்- தால், மலம் கழிக்கும் போது வலி, (tenesmus) உண்டாகிறது. சீத பேதி நாட்பட்ட நிலையடைந்தால், வயிற்றுப் போக்கும் மலச் சிக்கலும் மாறி, மாறித் தோன்றுகின்றன. நாளடைவில், இந்நோயாளி, நோய் கடத்தியாக மாறுகிறார். இந்நோய்க்கு மருத்துவமாக எமெட்டின், டைஹைட்ரோ எமெட்டின், மெட்ரோனிடசால் போன்ற மருந்துகள் பயன்படுகின்றன.\n\nபாக்டீரியா சீதபேதியில், ஷிகல்லா என்னும் நுண்ணுயிரி பெருங்குடலின் சீதச் சவ்வை ஊடுருவிச் சிதைக்கிறது. ஷிகல்லா பாக்டீரியாக்களுடன், மேலும், இரண்டு வகைகளும் (ஃபிளக்ஷனர் மற்றும் சோனி) சீத பேதியை உண்டாக்குகின்றன. அமீபா சீத பேதியை விடப் பாக்டீரியா சீத பேதி மிகு விரைவாகத் தோன்றுகிறது.\n\nஇவ்வகைச் சீத பேதியில் வயிற்றுப் போக்கு, சீதம், குருதி வெளிப்பாடு, காய்ச்சல் ஆகியன தோன்றும். இதுவும் நாட்பட்ட நிலை அடைந்து, பல ஆண்டுகள் நீடிக்கலாம். ஷிகல்லா நுண்ணுயிரிகளின் நச்சுப் பொருள்கள் உள் ஏற்கப்படுவதால், கண் அழற்சியும், மூட்டழற்சியும் தோன்றுகின்றன. அண்மைக் காலமாக மிகு ஆற்றலுடைய நுண்ணுயிர் எதிர் மருந்துகள் (சல்ஃபோனமைடுகள், ஆம்பிசிலின்) கண்டு பிடிக்கப் பட்டுள்ளமையால் இந்நோய் தீங்கற்றதாக மாறி விட்டது. ஆனால், குழந்தைகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன்ர். உணவும், அருந்தும் பானங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளியைத் தனிப்படுத்த வேண்டும். சிறுநீர், மலம் கழித்த பின்னரும், உண்ணுவதற்கு முன்பும், கைகளை நன்கு தூய்மை செய்து கொள்ள வேண்டும். right|—மு.கி, பழனியப்பன்"}}