{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4dgzjvvh/", "data": {"id": "4dgzjvvh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4dgzjvvh/", "kind": "article", "headword": "உத்தரன்", "romanization": "uttaraṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.717607+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மகாபாரதக் கதைமாந்தருள் ஒருவன்; மச்சநாட்டு மன்னன்; விராடன் என்பவனுக்கு மகன்.", "body_ta": "மகாபாரதக் கதைமாந்தருள் ஒருவன்; மச்சநாட்டு மன்னன்; விராடன் என்பவனுக்கு மகன். இவன் தாயின் பெயர் சுதட்சணை, பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த (அஞ்ஞாதவாச) காலத்தில் இவன் நாட்டில்தான் வாழ்ந்தனர். துரியோதனன் ஆட்கள் இதனைக் குறிப்பாக கு உணர்ந்து, வெளிப்படுத்தும் கருத்தில் அந்நாட்டில் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றனர். உத்தரன் பேடி ஒருவனைத் தேர்ப்பாகனாகக் கொண்டு ஆனிரை மீட்கச் சென்றான். எதிரியின் படை கண்டு அஞ்சிப் பின் வாங்கினான். பேடி வடிவில் இருந்த அருச்சுனன் தன் உண்மையை அவனுக்கு உணர்த்தி, உத்தரனைத் தேரோட்டியாகக் கொண்டு போர் செய்து வென்று ஆனிரைகளை மீட்டான். தன் மகனே போரிட்டு வென்றதாக விராடன் எண்ணினான். ஆனால் மறைந்து வாழ்ந்த தருமரால் அவன் உண்மை உணர்ந்தான். பாரதப் போர் நடைபெற்ற காலத்தில், உத்தரன் முதல்நாள் போரில் சல்லியன் என்பவனால் கொல்லப்பட்டான்."}}