{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/49p2vct2/", "data": {"id": "49p2vct2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/49p2vct2/", "kind": "word", "headword": "பாஞ்சராத்திரம்", "romanization": "pāñcarāttiram", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:01.372210+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாஞ்சராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள். ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டது. எனவே இந்தப் பெயர் வந்தது. பாஞ்சராத்ர ஸம்ஹிதை சில்ப சாஸ்த்ரம், வாஸ்த்து சாஸ்த்ரம், பல்வேறு தெய்வங்களின் உருவ வர்ணனை, அவர்களின் ஆயுதங்கள், பிம்பங்களின் அளவுகள், ஆராதனை முறை, அண்டங்களின் சிருஷ்டி க்ரமம், யோகம் அதாவது கடவுளை நெருங்குவதற்கான வழிகளை விவரித்தல் ஆகியவை அடங்கியது. இவையனைத்தும் ஜ்ஞானம் (ச்ருஷ்டி முதலியன), யோகம் (கடவுளை அடையும் வழி), கிரியா (ஆலய - பிம்ப நிர்மாணங்கள்), சரியா (பூஜை செய்யும் முறை) என்ற நான்கு தலைப்புகளில் அடங்கும்.", "needs_definition": false, "gloss_en": "Pancharathiram means five nights. This philosophy of Vishnu worship was preached in one of the Sathra Yakas. Panchrathiram Samhitas speak about sculpture, vastu, description deities, weapons, icons and measurements, procedures for worship, creation of universe, karma, yoga etc. The four parts include Gnana, Yoga, Kriya and Sariya", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பாஞ்சராத்திரம்"}, {"n": 2, "definition_ta": "வைஷ்ணவ ஆகமம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 283"}, {"n": 3, "definition_ta": "இது ஒரு வைணவ ஆகமம். இதன் வழித் தோன்றிய வைணவ மதம் பாஞ்சராத்திரம். இது ஒரு புறச்சமயம். இராமானுசர் பிரம சூத்திரத்திற்குச் செய்த விசிட்டாத்துவம் என்னும் கொள்கையையே இதன் தத்துவம் பெரும்பாலும் பின்பற்றுகிறது. நாராயணனே பரம்பொருள். அவனைச் சரண் அடைதலே வீடு பேறு என்னும் கொள்கை. இக் கொள்கை உடையவர் பாஞ்சராத்திரிகள். இவர்களுக்கும் சிவாத்துவிதிகட்கும் பல வகையில் ஒற்றுமை உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 193"}]}}