{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/496s8jaf/", "data": {"id": "496s8jaf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/496s8jaf/", "kind": "article", "headword": "அதிகார சங்கிரகம்", "romanization": "atikāra caṅkirakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:34.072585+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வேதாந்த தேசிகர் எழுதிய நூல்களுள் ஒன்று.", "body_ta": "வேதாந்த தேசிகர் எழுதிய நூல்களுள் ஒன்று. உயர்வற உயர்ந்து நிற்கும் உலகளந்த பெருமான் தொண்டர்தம் பெருமைகளைக் கூறும் சிற்றிலக்கியம். இதில் பத்து ஆழ்வார்கள், மதுர கவிகள், எட்டு ஆசாரியர்கள், நாதமுனிகள் ஆகியோர் வைணவ சித்தாந்த வளர்ச்சிக்குச் செய்த தொண்டுகளைக் கூறிப் பின் ஒவ்வொரு பகுதியிலும் பொருளைச் சுருக்கி, அந்தாதித் தொடையில் இதன் ஆசிரியர் அமைத்துள்ளார். கோயில் (திருவரங்கம்) திருமலை (திருப்பதி), பெருமாள் கோயில் (காஞ்சிபுரம்) ஆகிய திருப்பதிகட்கும் ஒவ்வொரு பாடல் இயற்றியுள்ளார். இறுதியில் திருவரங்கப் பெருமானின் பெருமையைப் பாடி ஆசாரியர்களின் கருணையை நினைத்து முடித்துள்ளார்.த.கோ."}}