{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4926fdda/", "data": {"id": "4926fdda", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4926fdda/", "kind": "article", "headword": "உசாத்தானம்", "romanization": "ucāttāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.108892+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று; சோழநாட்டில் உள்ளது.", "body_ta": "தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று; சோழநாட்டில் உள்ளது. திருவுசாத்தானம் எனப்படும் இவ்வூர் இக்காலத்தில் கோவிலூர் என்று வழங்கப்படுகிறது. இது தஞ்சை மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைப் புகைவண்டி நிலையத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் உள்ளது. இத்தலத்தினை இராமர், இலக்குவர், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோர் வழிபட்டனர் என்று ஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வூருக்கு ஞானசம்பந்தர் பாடிய, ‘நீரிடைத் துயின்றவன்’ எனத் தொடங்கும் தேவாரப்பதிகம் (3.33) உள்ளது. அப்பதிகத்தில் ஒன்பது பாடல்களே கிடைத்துள்ளன. இத்தலத்தே கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் மந்திரபுரீசுவரர்; இறைவி பெயர் பெரியநாயகி. இங்குள்ள இலிங்கத் திருமேனி வெண்மை நிறங்கொண்டமைந்த சுயம்பு மூர்த்தியாகும். இத்தலத்திற்குச் சூதவனம் என்றும் பெயரும் உண்டு. ‘சூதவனபுராணம்’ என்று அப்பெயராலமைந்த ஒரு தலபுராணம் இயற்றப்பட்டுள்ளது. இத்தலத்தில் சங்கர வேதாந்திகள் மடம் ஒன்று உள்ளது."}}