{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/44txpkje/", "data": {"id": "44txpkje", "url": "https://nigandu.oliyonresearch.com/e/44txpkje/", "kind": "article", "headword": "சுருள் கம்பளி நூல் ஆடை", "romanization": "curuḷ kampaḷi nūl āṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.037332+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சோவியத் ஒன்றியக் குடியரசில் உள்ள அஸ்ட்ரகான் என்னும் வோல்கா நதிக் கரை நகரத்தில் வளர்க்கப் படும் ஒரு வகைச் செம்மறி ஆட்டின் தோலிலிருந்து பெறப்படும் நூல், சுருள் கம்பளி நூலாகும்.", "body_ta": "சோவியத் ஒன்றியக் குடியரசில் உள்ள அஸ்ட்ரகான் என்னும் வோல்கா நதிக் கரை நகரத்தில் வளர்க்கப் படும் ஒரு வகைச் செம்மறி ஆட்டின் தோலிலிருந்து பெறப்படும் நூல், சுருள் கம்பளி நூலாகும். அஸ்ட்ரகான் ஆட்டுத் தோலின் தோற்றத்தைப் பெறும் பொருட்டு, இயற்கை இழைகளைக் கொண்டு, நெருங்கிய சுருள்களால் மூடப்பட்ட மோட்டாத் துணி தயாரிக்கப்படுகிறது. இத்துணியும் அஸ்ட்ரகான் எனக் குறிப்பிடப்படுகிறது. பருத்தியை அடிப்படை நூல்களாகவும், கம்பளி, அக்ரிலிக், மோடாக்ரிலிக், மோஹேர் நூல்களை அடுக்குகளாகவும் (pile) அமைத்து நெய்தல், பின்னுதல் இரு வகைச் செயல் முறைகளிலும் இத்துணியை உருவாக்கலாம். இது மென்மயிர்க் குஞ்சத் துணியை (fur) ஒத்தது. —மே. ரா. பாலசுப்பிரமணியன்"}}