{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3y7fuzmm/", "data": {"id": "3y7fuzmm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3y7fuzmm/", "kind": "article", "headword": "ஆர்க்கினி தீவுகள்", "romanization": "ārkkiṉi tīvukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.286655+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை மொத்தம் 67 தீவுகள்.", "body_ta": "(Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கிறார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந்தவை. இவை மிதமான தட்பவெப்ப நிலையில் மண்வளமும் உடையவை. இங்கு பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால்நடை, மீன், முட்டை முக்கியமான ஏற்றுமதி சரக்குகள். குளிர்காலத்தில் சூரிய வெளிச்சமும் கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலைநகரம்; முக்கியமான கடற்படைத் தளம். மொத்தப் பரப்பு 376 சதுர மைல். மக்;சு.21,600 (1946)."}}