{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3w7jb73b/", "data": {"id": "3w7jb73b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3w7jb73b/", "kind": "article", "headword": "ஆரஞ்சு நதி", "romanization": "ārañcu nati", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.752227+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தென் ஆப்பிரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஆறுகளுள் மிகப் பெரியது.", "body_ta": "தென் ஆப்பிரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஆறுகளுள் மிகப் பெரியது. ஆரஞ்சு என்ற டச்சு அரச குடும்பத்தாருடைய பெயரை இடப் பெற்றது. அங்குள்ள சுதேசிகளான ஹாட்டன்டாட்டுக்கள் அதைக் கரீப் அதாவது பெரிய நதி என்று அழைக்கிறார்கள். இது மேற்கு நோக்கி 1.300 மைல் ஓடி அட்லான்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் பெரிய கிளை வால்நதி என்பதாகும். பல நீர்வீழ்ச்சிகள் இருப்பதாலும், நதிமுகத்தில் மணல் திட்டு இருப்பதாலும், கப்பல் போக்குவரத்துக்கு வசதியில்லை. ஆனால் இது நீர்ப்பாசனத்துக்குப் பயன்பட்டு வருகிறது."}}