{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3sd27ue4/", "data": {"id": "3sd27ue4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3sd27ue4/", "kind": "article", "headword": "எலும்பு மண்டலம்", "romanization": "elumpu maṇṭalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:25.765972+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "முதுகெலும்புள்ள உயிரினங்கள் அனைத்துக்குமே எலும்புகளாலான சட்டகம் உண்டு.", "body_ta": "முதுகெலும்புள்ள உயிரினங்கள் அனைத்துக்குமே எலும்புகளாலான சட்டகம் உண்டு. இதுவே எலும்புக்கூடு ஆகும். இது உடலுக்குரிய வடிவத்தை அளிக்கிறது. உடலினுள் உள்ள உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உச்சந்தலை முதல் உள்பாதம் வரையுள்ள எலும்புகள் அனைத்தும் சேர்ந்த ஒட்டுமொத்த அமைப்பே ‘எலும்பு மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது. மனித உடலில் 206 எலும்புகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள். குழந்தைகளுக்கு 850 எலும்புகள் இருக்கும். குழந்தை வளரவளர சில எலும்புகள் ஒன்றாக இணைந்து எண்ணிக்கைக் குறைந்து விடுகிறது.\n\nஎலும்புகளால் உடலுக்கு எத்தனையோ நன்மைகள் ஏற்படுகின்றன. உடலில் உள்ள சதைகள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு எலும்புகளே ஆதாரமாக அமைந்துள்ளன. சதைகள் இயங்குவதற்கும் எலும்புகள் பெருந்துணை புரிகின்றன. உடலெங்கும் பரவியுள்ள நரம்புகளுக்குப் பற்றுக் கோடாக எலும்புகளே அமைந்துள்ளன. உடலின் மிக முக்கியமான மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மை உறுப்புகளை அரண் போல் காக்கும் கேடயமாகவும் எலும்புகள் அமைந்து உதவுகின்றன. எலும்புகள் இரத்த உயிரணுக்களின் உற்பத்திக் கேந்திரமாகவும் விளங்குகின்றன. உடலுக்கு இன்றியமையாத கால்சியம் எனும் சுண்ணாம்புச் சத்துப் பொருளை எலும்புகளே சேமித்து வைத்து உதவுகின்றன.\n\nதனித்தனியான எலும்புகள் ஆங்காங்கே இணைந்து இயங்குகின்றன. இந்த இணைப்புகளே 'மூட்டுகள்' என அழைக்கப்படுகின்றன. இந்த மூட்டுகள் அனைத்தும் ஒரே வகையினவாக இல்லை. சில அசையும் தன்மையுள்ளவை; சில அசையாத் தன்மை கொண்டவை. கால்களில் உள்ள மூட்டுகள் அசையும் தன்மைக்கு எடுத்துக்காட்டாகும். தலையில் உள்ள மண்டையோடுகள் அசையா எலும்புகளுக்கு உதாரணமாகும்.\n\nஉடல் எலும்புகளிலேயே மிக முக்கியப் பகுதியாக அமைந்திருப்பது முதுகெலும்பு ஆகும். இதை 'முள்ளந்தண்டு' என்றும் கூறுவர். இதில் முள் போன்ற 26 எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேர்க்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளன. இம்முதுகெலும்போடு மார் புக்கூடுஇணைந்துள்ளது. மார்புக்கூடு இதயம், நுரையீரல் போன்ற மென்மையான மிக முக்கிய உறுப்புகளைக் காக்கும் வகையில் அமைந்துள்ளன. முதுகெலும்பு மண்டையோட்டு எலும்புடன் இணைந்துள்ளது. முதுகெலும்பின் கீழ்முனை இடுப்பெலும்புடன் இணைந்துள்ளது.\n\nதலையில் உள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 22 ஆகும், காதில் மூன்று எலும்புகள் தொடர் எலும்புகளாக அமைந்துள்ளன. இரு காதிலும் உள்ள ஆறு எலும்புகளுடன் நாவின் தொடக்கவிட எலும்பும் சேர தலை எலும்புகள் 29 ஆகின்றன. கை எலும்புகள் 80 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கைகள், தோல் வகை எலும்பால் முதுகெலும்புடன் இணைந்துள்ளது. தோள் வளையப் பகுதியில் தோல்பட்டை எலும்பும் முன்பகுதியில் காரை எலும்பும் உள்ளன.\n\nகைப்பகுதிபோன்றே ஒவ்வொரு கால் பகுதியிலும் 80 எலும்புகள் உள்ளன. கால் பகுதியில் உள்ள தொடை எலும்புகளே எலும்புகளிலெல்லாம் மிகப் பெரியனவாகும். கால் எலும்புகள் இடுப்பு வளைய எலும்புமூலம் முதுகெலும்புடன் இணைந்துள்ளன.\n\nஎலும்புகளின் வளர்ச்சிக்குச் சுண்ணாம்புச் சத்தாகிய கால்சியமும் வைட்டமின்-டியும் மிக அவசியமாகும். இச்சத்துப் பொருட்கள் போதிய அளவில் எலும்புக்குக் கிடைக்கவில்லை என்றால் எலும்பு வளர்ச்சி குன்றும். அவை வலுவடையா. எளிதில் வளையவும் ஒடியவும் நேரிடும். இச்சத்துப் பொருட்களோடு பொருட்களோடு நல்ல உடற்பயிற்சியும் எலும்புகளைக் கெட்டிப்படுத்தும்; வலுவடையச் செய்யும். மதுபானப் பொருட்கள் எலும்பு வளர்ச்சியைப் பாதிப்பனவாகும்.\n\nதாயின் கருப்பையில் சிசுவாக இருக்கும்போது எலும்பின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. சிசு உண்டான இரண்டாவது வாரத்தில் 'மீசன்கைம்’ என்ற திசுவிலிருந்து எலும்பு வளரத் தொடங்குகிறது. இரண்டாவது மாதத்தில் இது குருத்தெலும்பாக மாறி மூன்றாவது மாதத்தில் முழு எலும்பாக வடிவெடுக்கும்:\n\nஇறந்தவரின் எலும்பை வைத்து, அவர் ஆணா, பெண்ணா, இறக்கும்போது அவருக்கு வயது எத்தனை போன்ற விவரங்களைச் சொல்லிவிடமுடியும். இது குற்றவியல் நிபுணர்களுக்குப் பேருதவியாக இருக்கும்."}}