{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3s2vge8b/", "data": {"id": "3s2vge8b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3s2vge8b/", "kind": "article", "headword": "அகநிலைப்பாலை", "romanization": "akanilaippālai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.920909+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகநிலைப்பாலை என்பது ஓர் இசையமைப்பு முறை ஆகும், பண்களை உண்டாக்குவதற்குப் பல்வேறு முறைகள் இருந்தன.", "body_ta": "அகநிலைப்பாலை என்பது ஓர் இசையமைப்பு முறை ஆகும், பண்களை உண்டாக்குவதற்குப் பல்வேறு முறைகள் இருந்தன. அவற்றுள் நான்கு முறைகளை ஓர் இனமாகக் கூட்டி — சாதிப் பாலைகள் என்று பெயரிட்டு வழங்கி வந்தனர். நான்குமுறையில் தொகுத்த நால்வகைச் சாதிப் பாலைகள் 1. அகநிலைப்பாலை, 2. புறநிலைப்பாலை, 3. அருகியல்பாலை, 4. பெருகியல்பாலை என்பன. சிலப்பதிகாரத்திற்குப் பல நூற்றாண்டுக்கு முன்னரே பண்டைப் பாணர்கள் யாழிலும் குழலிலும் இம்முறைகளைக் கையாண்டு களிப்பூட்டினார்கள். இரு நரம்புகளின் அகநிலை என்பது அவற்றின் குரல், இளி உறவு நிலை, அதாவது, சட்சம பஞ்சம உறவு நிலையாகும். நின்ற பண்ணினுடைய ஏழு நரம்புகட்கும் (சுரங்கட்கும்) ‘ச.ப’ உறவு முறையில் உரிய ஏழு நரம்புகளை இசைப்பதே ‘அகநிலைப்பாலை முறை’யாகும் எடுத்துக் காட்டாக, செம்பாலை என்றது இன்றைய அரிகாம்போதி என யாழ்நூல் யாத்த விபுலானந்தர் ஆய்ந்து கூறியுள்ளது ஏற்றற்குரியது. செம்பாலையின் நரம்புகட்கு — “கு.இ” உறவில் (ச.ப. உதவில்) ஒளிக்கும் நரம்புத் தொகுப்பே – செம்பாலைக்குரிய அகநிலைப் பாலையாகும். அவற்றை இன்றைய சுரங்களாக நேர்நேர் நிறுத்திப் பின்வருமாறு காட்டலாம்.\n\nசெம்பாலைக்கு அகநிலைப்பாலை — அரும்பாலை :{|\n\nகுறிப்பு\n\n::1) ச — ப;\n\n::2) ரி — த;\n\n::3) க — நி;\n\n::4) ம — ச\n\n::5) ப — ரி;\n\n::6) த — க;\n\n::7) நி — ம; இந்த ஏழும் அகநிலை நரம்புகள்.\n\nமேலே காட்டிய இரு பாலையின் சுரங்கள் அகநிலையில் நிற்பதை அறியலாம்; எனவே, ஒருபாலையின் நரம்புகளில் — உழையைக் குரலாகக் கொண்டு (‘ம’ வை ‘ச’ வாகக் கொண்டு) இசைத்தால் நின்ற பாலைக்கு அகநிலைப் பாலை கிடைக்கும். இதுவே சுருக்கமான முறை எந்த ஒரு பெரும் இராகத்தையும் அதன் மத்திமத்தைச் சட்சமாகக் கொண்டு இசைத்தால் கிடைக்கும் இராகம் அகநிலை இராகம் ஆகும்.\n\n“உழை முதலாக... அகநிலை மருதம்” - (சிலப்.8: 37—39) என்றார். அரும்பதவுரைகாரர். இதன் பொருள்: மருதப்பாலையின் உழையைக் குரலாகக் கொண்டு, உழைமுதல் உழைவரை (ம—ம்) இசைத்தால், அகநிலை மருதம் வரும். “அகநிலை மருதமாவது\n\nஒத்த கிழமை\n\nஉயர்குரல் மருதம்” என்ற மேற்கோளையும் அரும்பதவுரைகாரர் காட்டியுள்ளார். “ஒத்த கிழமை” என்றது — ‘குரல் இளி’ உறவாகி (ச.ப. உறவாகி) ஒன்றோடு ஒன்று ஒத்து இணையும் உறவு நிலையாகும். இது 2000 ஆண்டுகளுக்கு முன் பாணர்கள் வழங்கிய முறையேயாயினும் இன்றும் குழலிலும் நாதசுரத்திலும் வீணையிலும் கின்னரத்திலும் (வயலின்) இம்முறையில் இசைத்துக் காட்டிப் பெரிதும் இன்பமூட்டுகிறார்கள். ஆனால், அதற்குரிய பெயர் இன்று இல்லை.\n\nஅகநிலை நரம்பு என்பதற்குரிய பிற பெயர்கள் இளிக் கிழமை நரம்பு, அகப்படு நரம்பு, இணை நரம்பு, பட்டடை நரம்பு என்பன. இப்பெயர்களாலும் “அகநிலைப்பாலை என்பது குரல் இளிக்கிழமைப் பாலை” எனத் தெளிவாய் அறியலாகும்.\n\nவீ.ப.கா.சு."}}