{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3pqmbbbe/", "data": {"id": "3pqmbbbe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3pqmbbbe/", "kind": "article", "headword": "ஆர்லியன்ஸ்", "romanization": "ārliyaṉs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.613819+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பிரான்ஸ் நாட்டின் ஆவார் நதியின் கரையிலுள்ள ஒரு நகரம்.", "body_ta": "பிரான்ஸ் நாட்டின் ஆவார் நதியின் கரையிலுள்ள ஒரு நகரம். 1429-ல் ஆங்கிலேயர் முற்றுகையிட்டிருந்தபோது ஜோன் என்னும் கன்னி பிரெஞ்சுப் படைக்குத் தலைமைவகித்து ஆங்கிலேயரை முறியடித்தாள். அவளுடைய சிலை நகரின் நடுவில் உள்ளது. கிறிஸ்தவக் கோயில் மிகச் சிறந்த காத்திய (Gothic) சிற்பங்களுள் ஒன்றாகும். மக் : 70,240 (1946)."}}