{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3n2b6dzm/", "data": {"id": "3n2b6dzm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3n2b6dzm/", "kind": "word", "headword": "நான்காம் தலைமுறை மொழி", "romanization": "nāṉkām talaimuṟai moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.083721+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயனா ளருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் ஒர் உயர்நிலை மொழி. இதற்கு, மரபு முறையையும் சொற்றொடரியலையும் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டிய அவசிய மில்லை. பெயர்ச் சுருக்கம் : 4GL வழக்கமான உயர்நிலை மரபு முறையையும் சொற்றொடரியலையும் விட மிக முன்னேறிய கணினி மொழி. எடுத்துக்காட்டாக தரவு தளத்தில், ஆனைப் பட்டியல், ஒரு தரவுக் கோப்பிலுள்ள அனைத்துப் பதிவேடுகளையும் காட்சியாகக் காட்டுகிறது. இரண்டாம், மூன்றாம் தலைமுறை மொழிகளில் ஒவ்வொரு ஏட்டினைப் படிக்கவும் கோப்பு முடிவைச் சோதிக்கவும், திரையில் ஒவ்வொரு தக வலையும் காட்டவும், செய்முறைப்படுத்தும் பதிவேடுகள் காலியாகும் அச்செயற்பாட்டினைத் திரும்பத் திரும்பச் செய்யவும் கட்டளைகள் எழுதப்பட வேண்டும். முதல் தலைமுறை மொழிகள் எந்திர மொழிகள்;இரண்டாம் தலை முறை மொழிகள் எந்திரம் சார்ந்த ஒருங்கிணைப்பு மொழிகள். Fortran, Cobol, Basic, Pascal, C போன்ற மூன்றாம் தலைமுறை மொழிகள் உயர் நிலைச் செயல்முறைப்படுத்தும் மொழிகள். dBASE, FoxBase, FoxPro போன்றவை நான்காம் தலைமுறைகள் என அழைக்கப்பட்டாலும், இவை உண்மையில் மூன்றாம், நான்காம் தலைமுறை மொழிகள் இணைந்தவை. dBASE list நிரல் என்பது நான்காம் தலைமுறை நிரல். ஆனால் இதில் செயல்முறைப் படுத்தப்பட்டுள்ள பயன்பாடுகள் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவை. வினவு மொழியும், அறிக்கை எழுது கருவியுங்கூட நான்காம் தலைமுறையைச் சார்ந்தவை.", "needs_definition": false, "gloss_en": "fourth generation language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 623"}]}}