{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3f748a6y/", "data": {"id": "3f748a6y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3f748a6y/", "kind": "word", "headword": "பீஏபீ", "romanization": "pīēpī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.495471+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. நுழைசொல் சான்றுறுதி நெறிமுறை என்று பொருள்படும் Password Authentication Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முனைக்குமுனை நெறிமுறையை (point-to-point protocol) பயன்படுத்தும் வழங்கனில் பயனாளர் நுழைய முயலும்போது அவருடைய அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கான ஒரு வழிமுறை. இதை விடக் கண்டிப்பான சாப் (CHAP-Challenge Hand-Shake Authentication Protocol) நெறி முறை இல்லாதபோது பீஏபீ மிகவும் பயன்தரும். பயனாளர் பெயரையும் நுழைசொல்ல்லையும் மறையாக்கமின்றி வேறொரு நிரலுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் நேரும் போதும் இது பயன்படும். 2. அச்சுப்பொறி அணுகல் நெறிமுறை என்று பொருள்படும் (Printer Access Protocol) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயராகவும் கொள்ளலாம். ஆப்பிள்டாக் பிணையங்களில் கணினிகளுக்கும் அச்சுப்பொறிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பினை மேலாண்மை செய்யும் நெறிமுறை ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "PAP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1075"}]}}