{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3damnp2d/", "data": {"id": "3damnp2d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3damnp2d/", "kind": "word", "headword": "ஆற்றல் நட்சத்திரம்", "romanization": "āṟṟal naṭcattiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:28.678995+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியை இயக்கி வைத்து விட்டுப் பணிபுரியாமல் இருக்கும் நேரத்திலும் காட்சித்திரை, நிலைவட்டு, நுண்செயலி, தாய்ப்பலகை ஆகியவை மின்சக்தியைச் செலவழித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் வீணாகும் மின்சாரம் ஏராளம். அமெரிக்க நாட்டில் அனைத்துக் கணினிகளிலும் பணிபுரியாதபோது வீணாகும் மின்சாரத்தை சேமிக்க முடிந் தால் மூன்று பெரும் அணுமின் நிலையங்களை மூடிவிடலாம் என்று ஒரு கணக்கெடுப்புக் கூறுகிறது. இந்நிலையை மாற்ற அமெரிக்க அதிபர் கிளின்டன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையிடம் ஒரு மாற்றுவழி காணச் செய்தார். அவர்களின் திட்டப்பணி அடிப்படையில், கணினியில் பணியாற்றாதபோது மிகக்குறைந்த அளவு மின்சாரமே செலவாகுமாறு கணினி உற்பத்தியாளர்கள் பணிக்கப் பட்டனர். கணினி இயக்க நிலையில் பணிபுரியாதபோது தாய்ப்பலகை, நுண்செயலி, நிலை வட்டு, காட்சித்திரை ஆகியவை 50 விழுக்காடு மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறு கணினிகள் வடிவமைக்கப் பட்டன. காட்சித்திரை குறிப் பிட்ட நேரம்வரை பயன் படுத்தப்படாவிட்டால் குறைந்த மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு உறக்க நிலைக்கு மாறிவிடும். இது போன்ற கணினி, பசுமைக்கணினி (Green PC) என்று அழைக்கப்படுகின்றது. ஆற்றல் நட்சத்திர ஒட்டிகளை (Stickers) கொண்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "energy star", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆற்றல் விண்மீன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 534"}]}}