{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/38qwdn6m/", "data": {"id": "38qwdn6m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/38qwdn6m/", "kind": "article", "headword": "அஜின்கோர்ட் போர்", "romanization": "ajiṉkōrṭ pōr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.635065+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அஜின்கோர்ட் போர்: வடபிரான்சிலுள்ள அஜின் கோர்ட்டில் 1415-ல் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் பெரும்போர் நடந்தது.", "body_ta": "அஜின்கோர்ட் போர்: வடபிரான்சிலுள்ள அஜின் கோர்ட்டில் 1415-ல் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் பெரும்போர் நடந்தது. ஆங்கில அரசனான V-ம் ஹென்ரி பிரான்சில் படையோடு இறங்கிக் கலேயைக் கைப்பற்றும் எண்ணத்தோடு அந்நகரை நோக்கிச் சென்றான். அஜின் கோர்ட்டில் இடைமறித்த பெரிய பிரெஞ்சுப் படையை ஆங்கிலேயப் படைகள் எளிதில் தோற்கடித்தன."}}