{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/33ffwaes/", "data": {"id": "33ffwaes", "url": "https://nigandu.oliyonresearch.com/e/33ffwaes/", "kind": "article", "headword": "இந்திய வரலாற்றுப் பத்திரக் கமிஷன்", "romanization": "intiya varalāṟṟup pattirak kamiṣaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:30.396252+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்திய வரலாற்றுப் பத்திரக் கமிஷன் (Indian Historical Records Commission) இந்திய அரசாங்கத்தால் 1919-ல் நிறுவப்பெற்று, 1941-ல் திருத்தி அமைக்கப்பட்டது.", "body_ta": "இந்திய வரலாற்றுப் பத்திரக் கமிஷன் (Indian Historical Records Commission) இந்திய அரசாங்கத்தால் 1919-ல் நிறுவப்பெற்று, 1941-ல் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் நோக்கம் வரலாற்றுப் பொருள்கள் அடங்கிய பத்திரங்களைப் பாதுகாப்பதும், தனி ஆட்களிடமுள்ள பத்திரங்களைக் கண்டுபிடிப்பதும், இந்திய வரலாற்று அண்மைக்காலம் பற்றிய பத்திரங்களை வெளியிடுவதும், பத்திரங்களைப் பாதுகாக்கும் முறைகளைப்பற்றிப் பயிற்சியளிப்பதுமாகும். ஆராய்ச்சி வெளியீட்டு உட்குழு என்றும், தலப்பத்திர உட்குழு என்றும் இரண்டு உட்குழுக்கள் இருக்கின்றன. இது ஆண்டுதோறும் தன் நடவடிக்கைகளை வெளியிடுகிறது. இதன் தலைவர் இந்திய அரசாங்கக் கல்வி அமைச்சர்; செயலாளர் இந்திய அரசாங்கப் பத்திரத் தலைவர்; அலுவலகம் புதுடெல்லியில் உள்ளது."}}