{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2z5nutax/", "data": {"id": "2z5nutax", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2z5nutax/", "kind": "word", "headword": "மீள்படியெடுப்பு", "romanization": "mīḷpaṭiyeṭuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.968460+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ராஸ்டர்-வருடல் கணினித் திரையகத்தில் மின்னணுக் கற்றை பின்பற்றும் பாதை, வலது ஒரம் சென்றபின் இடது ஒரத்துக்குத் திரும்புவதும், திரையின் அடிப்பகுதியிலிருந்து மேல்பக்கத்துக்குத் திரும்புவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மீள்படியெடுப்பின் போது மின்னணுக் கற்றையின் இருப்பிடம், இடமிருந்து வலமாக அல்லது மேலிருந்து கீழான அடுத்தகட்டப் பயணத்துக்குத் தயாராக நிர்ணயிக்கப் படுகிறது. இவ்வாறு வலமிருந்து இடமாக, கீழிருந்து மேலாக மின்னணுக்கற்றை பயணிக்கும்போது, கற்றை அகல் நிலை (OFF) ஆக்கப்படுகிறது. இதனால் திரையில் தேவையற்ற ஒரு கோடு வரையப்படுவது தடுக்கப்படுகிறது. மீள்படியெடுப்பு ஒரு வினாடியில் பலமுறை நிகழ்கிறது. தீர்க்கமான ஒத்திசைவுச் சமிக்கைகள் மூலம் ஒவ்வொரு முறையும் மின்னணுக்கற்றை அகல் நிலையாக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "retrace", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1256"}]}}