{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2rt8bg2f/", "data": {"id": "2rt8bg2f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2rt8bg2f/", "kind": "word", "headword": "பிட்நெட்", "romanization": "piṭneṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:53.059146+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏனெனில் அது நேரப் பிணையம் என்ற பொருள்தரும் Because It's Time Network என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981ஆம் ஆண்டில் வாஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட விரிபரப்புப் பிணையம் (WAN). ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிணையக் கழகம் (CREN பராமரித்து வந்தது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் பெருமுகக் கணினி அமைப்புகளிடையே (main frames) மின்னஞ்சல் மற்றும் கோப்புப் பரிமாற்றங்களுக்காக இப்பிணையம் பயன்பட்டது. பிட்நெட், டிசிபீ/ஐபி நெறி முறைக்குப் பதிலாக, ஐபிஎம் மின் பிணையப் பணி உள்ளீடு என்ற பொருள் படும் Network Job Entry (NJE) என்னும் தகவல் பரிமாற்ற நெறிமுறையைப் பயன்படுத்தியது. இன்றைக்கு இணையத்தில் அஞ்சல் குழுக்களைப் (mailing lists) பராமரிக்கப் பயன்படும் லிஸ்ட்செர்வ் (Listserve) என்னும் மென்பொருள் தொகுப்பு பிட்நெட்டில் உருவாக்கப்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "BitNET", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 159"}]}}