{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2pceb5zs/", "data": {"id": "2pceb5zs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2pceb5zs/", "kind": "word", "headword": "நுண்பதிவுப் படம்", "romanization": "nuṇpativup paṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:39.739604+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு ஒளிப்படத்தை அல்லது உருவப் படத்தை சம இடை வெளியில் அமைந்த வேறுபட்ட அளவுகளில் அமைந்த புள்ளிகளைக் கொண்ட நகலாகப் படியெடுத்தல். ஒளிப் படத்திலுள்ள ஒளி மாறுபாட்டு அளவுகளை சாம்பல் நிறச் சாயையில் காட்டுவது. உருவப்படத்தில் சற்றே இருள் சாயலுள்ள பகுதியிருப்பின், நுண்பதிவுப் படத்தில் அமையும் புள்ளி பெரிதாக இருக்கும். மரபு வழியிலான பதிப்புத் துறையில், உருவங்களை ஒர் இடைத்திரையின் வழியாக ஒளிப்படம் எடுத்து இத்தகைய நுண்பதிவுப் படங்களை உருவாக்குவர். கணினிப் பதிப்புத் துறையில் நுண்பதிவுப்படப்புள்ளி என்பது ஒளியச்சுப்பொறி அல்லது இலக்கமுறை உருச்செதுக்கி (Image setter) யால் அச்சிடப்பட்ட புள்ளிகளின் தொகுப்பாக இருக்கும். இரண்டு முறையிலும் நுண் பதிவுப் படப்புள்ளிகளின் எண்ணிக்கை ஒர் அங்குலத்தில் இத்தனை வரிகள் என அளவிடப்படுகிறது. அதிகத் தெளிவுள்ள அச்சுப்பொறியெனில் அதிகப் புள்ளிகள் இடம் பெற்று படத்தின் தரம் மிகும்", "needs_definition": false, "gloss_en": "halftone", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 675"}]}}