{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2m8tcjny/", "data": {"id": "2m8tcjny", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2m8tcjny/", "kind": "article", "headword": "உண்மைச் செலவு", "romanization": "uṇmaic celavu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.257652+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒரு பொருளின் உற்பத்திச் செலவில் அடங்காமலும் பணத்தினால் மதிப்- பீடு செய்ய இயலாமலும் உள்ளடங்கும் செலவு உண்மைச் செலவு (Real Cost) எனப்படும்.", "body_ta": "ஒரு பொருளின் உற்பத்திச் செலவில் அடங்காமலும் பணத்தினால் மதிப்- பீடு செய்ய இயலாமலும் உள்ளடங்கும் செலவு உண்மைச் செலவு (Real Cost) எனப்படும். தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் உற்பத்திச் செலவை உண்மைச் செலவு என்ற கண்ணோட்டத்தில் விளக்கினர். உற்பத்தியில் உள்ளார்ந்திருக்கும் தியாகம், உளவியல் ஈடுபாடு, கற்பனை ஆற்றல், அறிவாற்றலைப் பயன்படுத்தல், முயற்சிகள் ஆகியவற்றின் மொத்தமே உண்மைச் செலவு.\n\nஉழைப்பாளர்கள் தங்கள் உடலுழைப்பாலும் சிந்தனை மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்தும் முயற்சிகளும், முதலீட்டார் தங்கள் உடனடிச் செலவுகளைக் கைவிட்டுச் சேமிப்பதற்கென ஆற்றிய தியாகம், காத்திருத்தல் போன்றவையும் உண்மைச் செலவினைச் சாரும். உழைப்பு எல்லாச் சூழ்நிலைகளிலும் காலங்களிலும் இன்பத்தை அளிப்பதில்லை. உழைப்பின் முயற்சிகள், ஆற்றிய தியாகம், எதிர்பார்த்தும் எதிர்பாராமலும் ஏற்படும் இழப்புகள், துன்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் கூலி வரையறை செய்யப்படுவதில்லை. நடைமுறையில் கூலிக்கும் வட்டிக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. இதன் அடிப்படையில் உண்மைச் செலவு என்ற கருத்தை ஆசுத்திரியப் பொருளியல் வல்லுநர்கள் மறுத்தனர். காண்க: உற்பத்திச் செலவு."}}