{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2jkf374x/", "data": {"id": "2jkf374x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2jkf374x/", "kind": "word", "headword": "வார்ப்புரு", "romanization": "vārppuru", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:18.982543+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வார்ப்புரு"}, {"n": 2, "definition_ta": "ஒரே மாதிரியான படிகள்(copies) கிடைப்பதற்காக, முன்கூட்டியே அமைக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பை வார்ப்புரு என்கிறோம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வார்ப்புரு"}, {"n": 3, "definition_ta": "ஆங்கிலம் - template", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வார்ப்புரு"}, {"n": 4, "definition_ta": "ஆணைத் தொடர் அமைத்தலில், ஒரு தகவலின் வகையை இன்னொன்றாக மாற்றுதல்", "needs_definition": false, "gloss_en": "casting", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 123"}, {"n": 5, "definition_ta": "(1) பல் மற்றும் தாடையின் ஒரு நேர் படிவம். இதன் மீது பல்தொகுதி ஆதாரங்கள் செய்யப்படுகின்றன. (2) ஒரு பல் கருவியின் மெழுகுப் படிவத்தின் துல்லியமான உலோகப் படிவத்தை எடுத்தல். (3) ஒரு பொருள் எந்த உறுப்பின்மீது படிந்துள்ளதோ அந்த பொருளின் வடிவத்தில் உருவாக்கப்பட்ட பொருள். (4) எலும்புமுறிவு அல்லது இடப்பெயர்வு ஏற்பட்ட இடம் அசையாமல் இருப்பதற்காகப் போடப்படும் இறுக்கமான படைக்கட்டு", "needs_definition": false, "gloss_en": "cast", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 262"}]}}