{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zvn49d8r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zvn49d8r/", "kind": "article", "headword": "சூல் காலச் சிறுநீர்ப் பாதை நோய்", "romanization": "cūl kālac ciṟunīrp pātai nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.351760+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நாட்பட்ட சிறுநீரக அழற்சி மிகவும் அரிதாகச் சூல் காலத்தில் தோன்றும் ஆபத்தான நோயாகும்.", "body_ta": "நாட்பட்ட சிறுநீரக அழற்சி மிகவும் அரிதாகச் சூல் காலத்தில் தோன்றும் ஆபத்தான நோயாகும். முன்னரே நுண்ணுயிரிகளால் காய்ச்சல் உண்டாகியிருந்தால், சிறுநீரக நோய் வருவது இயல்பு. தாய்க்குக் குருதி மிகை அழுத்தமோ, கால் வீக்கமோ இல்லாமல் இருக்கலாம். வெளிப்படும் சிறுநீரில் புரதம் இருக்கும். ஒப்பு அடர்வு எண் குறைவாக இருக்கும். குருதியில் யூரியா மிகுதியாக (இயல் அளவு 40 மி.கி.%) இருக்கலாம். சிறுநீரக அழற்சி யின் போது, கருச் சிதைவு நிகழ்வதால், கருக் கலைப்புச் செய்து விடுதல் நலம்.\n\nசிறுநீரகப் பணிகள் செவ்வனே இருந்தால், சூல் கலைப்புத் தேவையில்லை. ஓய்வு தேவைப்படலாம். சில போது, மருத்துவம் பயனளிக்காமல், சிறுநீரக முறிவு ஏற்பட்டுக் கருப்பையினுள் குழந்தை இறந்து விடலாம். எனவே, கருப்பைத் திறப்பு அறுவை செய்து விடுவது நல்லது. —அ. கதிரேசன்"}}