{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zd6vcbpk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zd6vcbpk/", "kind": "word", "headword": "இணைய அணுகல்", "romanization": "iṇaiya aṇukal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.232023+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்துடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்.இருவகையில் இயலும்.முதல் வழிமுறை தொலை பேசி+இணக்கி மூலம் ஒர் இணையச் சேவையாளரின் வழியாகத் தொடர்பு கொள்ளுதல்.வீட்டுக் கணினிகளிலிருந்து பெரும்பாலான பயனாளர்கள் இந்த முறையிலேயே தொடர்பு கொள்கின்றனர்.இரண்டாவது வழிமுறை: தனிப்பட்ட இணைப்புத் தடம்(dedicated line)மூலம் ஒரு குறும்பரப்புப் பிணையத்தை இணையத்துடன் இணைத்தல்.பிணையத்தில் இணைக்கப் பட்ட கணினிகளில் பயனாளர் தொடர்புகொள்வர்.பெரும் நிறுவனங்கள் இத்தகு இணைப்புகளைப் பெற்றுள்ளன.தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்ட கருவி மூலமும் இணையத்தை அணுக முடியும்.இன்னும் பரவலாகப் புழக்கத்தில் வரவில்லை.", "needs_definition": false, "gloss_en": "Internet access", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 243"}]}}