{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yq7psdkd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yq7psdkd/", "kind": "article", "headword": "ஆக்ரான்", "romanization": "ākrāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.194701+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள நகரம்.", "body_ta": "(Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள நகரம். உலகத்திலுள்ள ரப்பர்க் கைத்தொழில் நகரங்களுள் இதுவே பெரியது. வேறு கைத்தொழில்களும் நடைபெறுகின்றன. ஆக்ரான் என்பதன் பொருள் உயரமான இடம் என்பதாகும். இது கடல் மட்டத்துக்கு 950 அடி உயரத்திலிருக்கிறது. மக்கள் தொகையில் 2·5% நீக்ரோக்கள். அமெரிக்காவின் பெரிய ஆகாய விமான நிலையங்களுள் ஒன்று இங்கே இருக்கிறது. நகராண்மைக் கழகத்தால் நடத்தப்பெறும் பல்கலைக் கழகம் ஒன்று உண்டு."}}