{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xzhagtbw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xzhagtbw/", "kind": "article", "headword": "அஷான்டி", "romanization": "aṣāṉṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.751864+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அஷான்டி (Ashanti) ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான கோல்டு கோஸ்ட்டுக் குடியேற்ற நாட்டைச் சார்ந்த ஒரு பகுதி.", "body_ta": "அஷான்டி (Ashanti) ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான கோல்டு கோஸ்ட்டுக் குடியேற்ற நாட்டைச் சார்ந்த ஒரு பகுதி. 1896-லிருந்து ஆங்கிலேயருக்குச் சொந்தமானது. பரப்பு : சு. 24.000 ச.மைல். கோல்டு கோஸ்ட்டு கவர்னரின் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு கமிஷனரின் ஆதீனத்தில் உள்ளது. இவருக்குக் கீழ் உள்ள உதவிக் கமிஷனர்கள் ஜில்லா நிருவாகத்தை நடத்துகின்றனர். முன்பு இது ஓர் ஆப்பிரிக்க இராச்சியமாயிருந்தது. மக் : சு. 6,00.000; தலைநகரம்: குமாசி; மக் : 78,483(1948). சி. எஸ். ஸ்ரீ]]."}}