{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xpercjjp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xpercjjp/", "kind": "word", "headword": "படிவக் கடிதம்", "romanization": "paṭivak kaṭitam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.773821+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கடிதத்தைப் பலருக்கும் அனுப்பி வைக்கத் தயாரிக்கும் முறை,அஞ்சல்-இணைப்பு (mail-merge) என்றழைக்கப்படுகிறது. அனைத்துச் சொல் செயலி(word processor) தொகுப்புகளிலும் இத்தகைய வசதி உண்டு. பலரின் முகவரிகள் ஒரு தரவுத் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அனைவருக்கும் அனுப்ப ஒரேயொரு கடித ஆவணம் தயாரிக்கப் பட்டிருக்கும். அஞ்சல் இணைப்பு நிரலை இயக்கியதும்,தனித் தனி முகவரிகளுடன் கடிதம் தயாராகி விடும். கடிதத்தில் முகவரி நாம் குறிப்பிடும் இடத்தில் செருகப்பட்டிருக்கும். தனித்தனிக் கடிதங்களை அச்சிட்டு அனைவருக்கும் அனுப்பி விட முடியும். அஞ்சல்-இணைப்பு மூலம் உருவாக்கப் படும் கடிதம் படிவக் கடிதம் என்றழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "form letter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 619"}]}}