{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xmtsyrhf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xmtsyrhf/", "kind": "word", "headword": "அம்பிகாபதி கோவை", "romanization": "ampikāpati kōvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.341934+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கம்பருடைய மகனான அம்பிகாபதி என்பவனால் பாடப்பட்டது. ஏனைய கோவை நூற்களுக்கும் இதற்கும் பெரிதும் வேறுபாடு உண்டு. மற்றைய கோவைகள் நாநூறு பாடல்களைக் கொண்டும், யார்மீது பாடப்பட்டதோ, அவர்களின் சிறப்பையும் தலத்தின் மாண்பையும் அறிவிக்கும் முறையில் அமைந்திருக்கும். ஆனால், இக்கோவை நாநூற்றிற்கு மேற்பட்ட பாடல்களையும், பல புதிய துறைகளையும் கொண்டு, பாட்டுடைத்தலைவன் இல்லாத காரணத்தால் முழுப் பாடலும் அகப்பொருளே அமையப் பாடப் பட்டது. காலம் 12-ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 456"}]}}