{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wq9je3ut", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wq9je3ut/", "kind": "article", "headword": "அலி பாச்சா", "romanization": "ali pāccā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.576149+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "துருக்கிய அரசியல் வல்லுநர்களில் ஒருவர்.", "body_ta": "துருக்கிய அரசியல் வல்லுநர்களில் ஒருவர். கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் உதுமானியச் சீர்திருத்த இயக்கத்தின் சீரிய தலைவர்களுள் ஒருவர். அலி பாச்சாவின் (Ali Pasha) முழுப்பெயர் முகமது அமீர் அலி என்பதாகும். துருக்கி நாட்டின் துணை நிலை அரசியல் தூதராகவும் (கி.பி. 1838) பின்னர்த் தூதராகவும் (கி.பி. 1841) இலண்டனில் பணியாற்றியவர். கி.பி. 1852–இல் நாட்டின் தலைமை அமைச்சரானார். தன்சிமத் அரசுக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தவர் (கி.பி. 1855). பவுட்டுபாசாவுடன் இணைந்து கி.பி. 1856–இல் கட்–இ–சரீப் சீர்திருத்தப் பேரறிக்கையை வெளியிடுவதில் பெரும்பங்கு கொண்டார். இச்சீர்திருத்தப் பேரறிக்கை எல்லாக் குடிமக்களின் வாழ்வுக்கும், சுதந்திரத்திற்கும் சொத்து உரிமைக்கும் உறுதி அளித்ததுடன், படை, வரிவிதிப்பு ஆகியவற்றிலும் சீர்திருத்தங்கள் வரும் எனவும் கூறியது. கி.பி. 1858 முதல் 1859, 1861, 1867 முதல் 1871 வரையிலான காலங்களில் பல முறை தலைமை அமைச்சராக இவர் பணியாற்றினார். அது சமயம் உதுமானிய நிருவாகத்துறை, நிதி, நீதி ஆகிய துறைகளில் மேலை நாடுகளின் பாணியில் விரிவான சீர்திருத்தங்களையும் புகுத்தினார்."}}