{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vvtcmt59", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vvtcmt59/", "kind": "word", "headword": "பட்டி பட்டியல்", "romanization": "paṭṭi paṭṭiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:59.016010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பயனாளர் தாம் விரும்புகின்ற நடவடிக் கையை மேற்கொள்ள பட்டியல் விருப்பத் தேர்வுகளின் பட்டியலிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து இயக்க வாய்ப்பளிக்கும் ஒரு பட்டியல். ஒரு கட்டளையை நிறைவேற்றுதல் அல்லது ஒர் ஆவணத்தை வடிவமைத்தல் போன்ற பணியாக இருக்கலாம். வரைகலை இடை முகத்தை வழங்குகின்ற பல பயன்பாட்டு நிரல்கள், இது போன்ற தேர்வுப் பட்டியை பயன்படுத்துகின்றன. பயனாளர்கள் நிரல் கட்டளைகளையும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லாத ஒர் எளிய மாற்று வழியை இதுபோன்ற பட்டிகள் வழங்குகின்றன.", "needs_definition": false, "gloss_en": "menu", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 922"}]}}