{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vj6wqytd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vj6wqytd/", "kind": "word", "headword": "கடைக் கோடுகள்", "romanization": "kaṭaik kōṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:42.051967+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆடுகளத்தின் கடைசி எல்லையைக் குறிக்கின்ற கோடுகள். இந்தக் கோடுகளின் மையத்தில் தான் இலக்குகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆடுகள எல்லையைக் குறிக்கப் பயன்படுவதுடன், மற்றொரு முக்கியமான பணிக்கும் இக்கோடுகள் உதவுகின்றன. இந்தக் கடைக் கோடுகளைக் கடந்து பந்து வெளியே செல்ல தாக்கும் குழுவினர்கள் காரணமாக இருந்தால் தடுக்கும் குழுவினர் குறியுதை பெற்று ஆட்டத்தைத் தொடங்கு வார்கள். பந்து வெளியே செல்ல தடுக்கும் குழுவினர்கள் காரணமாக இருந்தால், தாக்கும் குழுவினர் முனை உதை வாய்ப்புக்கிடைக்க மீண்டும் ஆட்டத்தைத் துவங்குவார்கள்.", "needs_definition": false, "gloss_en": "Goal Lines", "period": "", "register": "technical", "domain": "கால்பந்தாட்டம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 18"}]}}