{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vgsusbkz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vgsusbkz/", "kind": "article", "headword": "இடிஷ் மொழி", "romanization": "iṭiṣ moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.495220+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Iddish) போலிஷ் யூதர்களும் ரஷ்யயூதர்களும் பேசும் மொழியாகும்.", "body_ta": "(Iddish) போலிஷ் யூதர்களும் ரஷ்யயூதர்களும் பேசும் மொழியாகும். தாழ்ஜெர்மனின் சொல்வளத்தையும் அமைப்பையும் அடிப்படையாக நாடோடி மக்கள் மொழியாயிருப்பதால் இலக்கணமில்லை. 19ஆம் நூற்றாண்டுவரை இரண்டொரு புராணக் கதைகள் மட்டுமே காணப்பட்டன. அதன் பின்பு மோசே மெண்டல்சான் கட்டுரைகளும், லினெட்ஸ்கி சுய சரிதையும், கார்டன் பாடல்களும் இயற்றினர். அந்த நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெக்டர் எழுதிய கதைகள் அழகானவை. அனுபவம் நிறைந்தவை. புரூக் எழுதிய பாடல்கள் இனியவை. பெரெட்ஜ் என்பவர் கதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதினார். ‘ஷோலம் ஆலசெம்’ என்ற புனைபெயருடையவர் நகைச்சுவை நிரம்பியவர். அவருடைய பெயர் தெரியாத இடிஷ் மக்கள் இல்லை. அவருடைய பாற்காரன் தொபாயஸ் என்பது அழியாப் புகழ் வாய்ந்தது.பிரீஷ்மன்பெரிய திறனாய்வாளர்."}}