{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vetva6kx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vetva6kx/", "kind": "article", "headword": "சீதக் குடலழற்சி", "romanization": "cītak kuṭalaḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:56.756242+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சீதத்துடன் மலம் வெளிப்படும் நிலையில், குடலும் அழற்சி அடைந்திருக்கும்.", "body_ta": "சீதத்துடன் மலம் வெளிப்படும் நிலையில், குடலும் அழற்சி அடைந்திருக்கும். இதைப் படலக் குடலழற்சி (membranous colitis), சீதப் படலக் குடலழற்சி (mucoumembranous colitis), சீதக் குடலழற்சி (mucous colits), இணைப் படலக் குடலழற்சி (myxomembranous colitis) என்ற பல பெயர்களில் குறிக்கின்றனர். அண்மைக் காலத்தில் இந்நோய் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. குடலின் நரம்பு மற்றும் தசைக் கோளாறால் ஏற்படும் இது பெரும்பாலும், மனோ வய நிலையைச் சார்ந்தது. மலமிளக்கி மருந்துகளும், ஒவ்வாத உணவும் இந்நோயை மோசமடையச் செய்கின்றன. அண்மைக் காலமாக இந்நோய் காணப்படாமையால் மருத்துவமும் இல்லை என்றே தெரிகிறது. —மு. கி. பழநியப்பன்"}}