{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vchy8mq2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vchy8mq2/", "kind": "word", "headword": "இணைப்பித்தல்", "romanization": "iṇaippittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.815195+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு முனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழி முறை. எடுத்துக்காட்டாக, தொலைபேசி வழியான பிணைய இணைப்பில் அழைத்தவர்க்கும் அழைக்கப்பட்டவர்க்கும் இடையேயான தொடர்பு ஓர் இணைப்பக மையம் வழியே தான் நடைபெறுகிறது. கணினிப் பிணையங்களில் இரண்டு முனைகள் தகவல் பரிமாறிக் கொள்ள செய்தி இணைப்புறுத்தல் பொதி இணைப்புறுத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு முறையிலுமே இடைநிலை நிலையங்கள் மூலம் செய்திகள் திசைவிக்கப்படுகின்றன. இதனால் அனுப்பி/வாங்கி இரண்டுக்கும் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது", "needs_definition": false, "gloss_en": "switching", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணைப்புறுத்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1406"}]}}