{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v2uyjc7h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v2uyjc7h/", "kind": "word", "headword": "தனி அடி", "romanization": "taṉi aṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:43.126121+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குழுவின் ஆட்டக்காரர் ஒருவர் இழைத்த தவறுக்காக, தவறு நடந்த இடத்திலிருந்து, எதிர்க்குழு ஆட்டக்காரர் ஒருவருக்கு அதே இடத்தில் பந்தை வைத்து, அடுத்தவர் இடையீடின்றி அடிக்கும் 'தனி அடி' எனும் வாய்ப்பு நடுவரால் கொடுக்கப்படுகிறது. தனி அடி அடிக்கும் முன்' பந்தானது தரையில் அசைவற்று நிலையாக வைக்கப்பட வேண்டும். ஆட்டக்காரர் யாராக இருந்தாலும், 5 கெச தூரத்திற்குத் தள்ளி தான் நிற்க வேண்டும். தனி அடி அடித்தவரே, பிறர் பந்தை விளையாடுவதற்கு முன் , தானே இரண்டாவது முறையாக ஆடக் கூடாது.", "needs_definition": false, "gloss_en": "Free Hit", "period": "", "register": "technical", "domain": "வளைகோல் பந்தாட்டம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 130"}]}}