{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uv3eu3z7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uv3eu3z7/", "kind": "word", "headword": "ஏறுமுக வரிசை", "romanization": "ēṟumuka varicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:46.684787+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏறுவரிசை என்பது ஒரு பட்டியலிலுள்ள உறுப்புகளை சிறியதில் தொடங்கி பெரியதில் முடியுமாறு வரிசைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக 1 முதல் 10 வரை, அ முதல் ஒள வரை அடுக்குவது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்பில் இத்தகைய அகர வரிசையை முடிவு செய்வது மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, எண்களை எழுத்துகளுக்கு முன்னால் வைப்பதா பின்னால் வைப்பதா, இடவெளிகளை (spaces) எங்கு சேர்ப்பது?. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை பெரிய எழுத்து, சிறிய எழுத்துச் சிக்கல் உண்டு. ஆஸ்க்கி அட்டவணையின் எண் மதிப்பு அடிப்படையில், ஆங்கிலச் சிறிய எழுத்து, பெரிய எழுத்தை விட அதிக மதிப்புக் கொண்டது.", "needs_definition": false, "gloss_en": "ascending order", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 95"}]}}