{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "upswx6es", "url": "https://nigandu.oliyonresearch.com/e/upswx6es/", "kind": "word", "headword": "பசைமின்கலம்", "romanization": "pacaimiṉkalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:31.571691+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உலர் மின்கலம். இது திருந்திய லெக்லாஞ்சி மின்கலமே. நேர்மின்வாய் கரி, எதிர்மின்வாய் துத்தநாகம். முனைப்படுதல் நீக்கி மாங்கனீஸ் ஈராக்சைடு, துண்டும் நீர்மம் நவச்சாரப் பசை, துத்த நாகத்திற்கடுத்துப் பசைக்கலவை யுள்ளது. இதில் பாரீஸ் சாந்து, துத்ததாகக் குளோரைடு, நவச்சாரம் ஆகியவை உள்ளன. இதற்கடுத்து ஒரு துணிப்பையில் தூள் கலவை உள்ளது. இதில் துத்தநாகக் குளோரைடு, கரித்துள், நவச்சாரம், மாங்கனீஸ் ஈராக்சைடு ஆகியவை சேர்ந்த கலவை உள்ளது. பசை எளிதில் உலர்ந்துவிடாமலிருக்கவும் பையிலுள்ள கலவை கீழே சிந்தாமல் இருக்கவும் கலத்தின் வாய்ப்பகுதி கெட்டித்தாரினால் முடப்பட்டிருக்கும். உள்ளே உண்டாகும் வளிகள் வெளிச்செல்லக் கரித்தண்டுக்கருகில் ஒரு சிறிய துளை உண்டு. இதன் மின்னியக்கு விசை 15 ஒல்ட் கைவிளக்கு வானொலி முதலியவற்றில் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "dry cell", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 130"}]}}