{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ufxt44c4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ufxt44c4/", "kind": "article", "headword": "அகில இந்திய அழகுக்கலை கம்மியச் சங்கம்", "romanization": "akila intiya aḻakukkalai kammiyac caṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.421968+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(All India Fine Arts Society ) 1926-ல் நிறுவப் பெற்றது.", "body_ta": "(All India Fine Arts Society ) 1926-ல் நிறுவப் பெற்றது. இதன் நோக்கம் இந்தியாவின் பண்டைய அழகுக்கலைகளையும் பிற்கால அழகுக்கலைகளையும் பற்றி ஆராய்ச்சி செய்வதையும் மதிப்பிடுவதையும் வளர்ப்பதாகும். இது ஆண்டுதோறும் டெல்லியில் அழகுக்கலைப் பொருட்காட்சி நடத்துகிறது. பிரயாண அழகுக்கலைப் பொருட்காட்சி என்று ஒன்று அமைக்கப் பெற்று முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்திய அழகுக்கலைப் பொருள்களை அயல்நாடுகளிலும் அயல் நாட்டு அழகுக்கலைப் பொருள்களை இந்தியாவிலும் பொருட்காட்சியாகக் காட்டி வருகிறது. ரூபலேகை என்ற அரையாண்டு இதழையும், கலைச் செய்திகள் (Art News) என்ற கால் ஆண்டு இதழையும் நடத்துக்கின்றது. இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இருக்கிறது."}}