{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u75a9y7a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u75a9y7a/", "kind": "article", "headword": "அக்கராபாலிசு", "romanization": "akkarāpālicu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.360764+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அக்கராபாலிசு என்பது பண்டைய கிரீசு நாட்டில் இருந்த நகர அரசுகளின் (City States) மையப் பகுதியாகும்.", "body_ta": "அக்கராபாலிசு என்பது பண்டைய கிரீசு நாட்டில் இருந்த நகர அரசுகளின் (City States) மையப் பகுதியாகும். தொடக்ககாலக் கிரேக்கர்கள், தம் நகரங்களைக் குன்றுகளைச் சுற்றி அமைத்துக் கொண்டார்கள். இவ்வாறு அமைத்துக் கொள்வது நகரின் பாதுகாப்பிற்கு உகந்ததெனக் கருதப்பட்டது. குன்றுகளின் உச்சியில் பின்னர்க்கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டு, நகர ஆட்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அவை, சமய மையங்களாகவும் விளங்கின.\n\nஅக்கராபாலிசு (Acropolis)\n\nஇவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம்."}}