{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u3u2hjje", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u3u2hjje/", "kind": "word", "headword": "கொதிநிலை", "romanization": "kotinilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:30.127654+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு திரவம் கொதித்து ஆவியாகக் கூடிய உச்ச வெப்ப நிலை. இது வாயுமண்டலக் காற்றின் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகிறது. ஒரு மலையின் உச்சியில் நீர், கடல் மட்டத்தை விடக் குறைந்த வெப்ப நிலையில் ஆவியாகிறது. ஒரு குறிப்பிட்ட வாயு மண்டலக் காற்றழுத்தத்தில் (பாரமானியில் பாதரசம் 76 செ.மீ. அளவு) ஒரு திரவம் ஆவியாவதைப் பொறுத்து அதன் கொதிநிலை நிருணயிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "boiling point", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 106"}]}}