{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tsmgjgq4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tsmgjgq4/", "kind": "article", "headword": "ஆக்ஸ்பர்க்", "romanization": "ākspark", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.227092+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்ஸ்பர்க் (Augsburg) தென் ஜெர்மனியில் பவேரியாப் பகுதியிலுள்ள நகரம்.", "body_ta": "ஆக்ஸ்பர்க் (Augsburg) தென் ஜெர்மனியில் பவேரியாப் பகுதியிலுள்ள நகரம். அகஸ்டஸ் சக்கரவர்த்தி கி.மு.12-ல் நிறுவிய ஒரு பழைய குடியேற்றம் இருந்த இடத்தில் இருக்கிறது. இப்போது இங்கே கண்ணாடி, பீங்கான், கடிகாரம், ரசாயனப் பொருள்கள் செய்யப்படுகின்றன. இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்னர் இங்குத்தான் டீசல் நீர்மூழ்கி எஞ்சின்கள் அதிகமாகச் செய்யப்பட்டு வந்தன. மக் : 1,85,374 (1934)."}}