{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t9cu2ha9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t9cu2ha9/", "kind": "word", "headword": "கூட்டுருத் திரைக்காட்சி", "romanization": "kūṭṭurut tiraikkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:07.757562+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைக்காட்சி மற்றும் சில கணினித் திரைகளின் காட்சிப் பண்பியல்பைக் குறிக்கிறது. கூட்டுக் கலவையான சமிக்கைகளிலிருந்து ஒரு படிமத்தை மீட்டெடுக்கும் திறனைக் குறிப்பிடுகிறது. கூட்டுருக் காட்சி கறுப்பு வெள்ளையாகவோ, வண்ணமாகவோ இருக்கலாம். சாதாரண கறுப்பு வெள்ளை அல்லது சிபநீ (RGB) வண்ணத்திரைகளைக் காட்டிலும் தெளிவற்றே இருக்கும். சிபநீ காட்சித் திரைகள் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறக் கூறுகளுக்குத் தனித்தனி சமிக்கைகளையும் தனித்தனி இணைப்புக் கம்பிகளையும் கொண்டுள்ளன. ஆனால் கூட்டுருக் காட்சித் திரைகள் ஒரே இணைப்புக் கம்பியிலேயே படிமத்தை உருவாக்குவதற்கான தரவு சமிக்கைகளையும், கிடைமட்ட மற்றும் செங்குத்து வருடல்களுக்கான துடிப்புத் தரவுகளையும் பெறுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "composite display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 297"}]}}