{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "szsv65gj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/szsv65gj/", "kind": "article", "headword": "ஆக்டியம்", "romanization": "ākṭiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.105664+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்டியம் (Actium) கிரீஸ் நாட்டின் மேற்குக் கரையிலுள்ள ஒரு மேட்டு முனை.", "body_ta": "ஆக்டியம் (Actium) கிரீஸ் நாட்டின் மேற்குக் கரையிலுள்ள ஒரு மேட்டு முனை. இப்போது ஆக்ரி என்று வழங்குகிறது. இங்குத்தான் கி. மு. 31-ல் அக்டேவியசின் சேனைக்கும் அந்தோனி, கிளியோபாத்ராவின் சேனைக்கும் கடற்போர் நிகழ்ந்தது. அக்டேவியஸ் வென்றதன் காரணமாக ரோமானியக் குடியரசு மறைந்து ரோமானிய சாம்ராச்சியம் தோன்றிற்று."}}