{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "stzbajyk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/stzbajyk/", "kind": "article", "headword": "அக்கீயா", "romanization": "akkīyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:16.815909+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கிரீசின் தென் பகுதியான பெலபொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ள ஒரு பகுதி.", "body_ta": "கிரீசின் தென் பகுதியான பெலபொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ள ஒரு பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பிரதேசத்தில் கரையோரமாக இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின. தற்போது அக்கீயா என்பது கிரீசிலுள்ள பெலபொனீசஸ் ஜில்லாவையே குறிக்கும். இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமானது."}}