{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ssqh8hpp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ssqh8hpp/", "kind": "word", "headword": "பிக்ஸ்", "romanization": "piks", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:53.355539+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எண்மித் தகவல் பரிமாற்றம் என்று பொருள்படும் byte information exchange என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பைட் (byte) இதழ் தொடங்கி வைத்த ஒர் இணையச் சேவை. இப்போது டெல்ஃபி இணையச் சேவைக் கழகம் (delphi internet services corporation) இதனை வாங்கிச் செயல் படுத்தி வருகிறது. மின்னஞ்சல், மென்பொருள் பதிவிறக்கம், மென்பொருள்/வன்பொருள் தொடர்புடைய கருத்தரங்குகள் போன்ற சேவைகளை பிக்ஸ் வழங்கி வருகிறது", "needs_definition": false, "gloss_en": "Bix", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 162"}, {"n": 2, "definition_ta": "இணைய உள்ளடக்கத் தேர்வுக்கான பணித்தளம் எனப் பொருள்படும். Platform for internet Content Selection என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி இணையப் பயனாளர் ஒருவர் இணையத்திலுள்ள தமக்குப் பிடித்த தகவலடங்கிய குறிப்பிட்ட தளங்களைத் தாமாகவே தேடி அணுகுமாறு செய்ய முடியும். அதேவேளையில் விரும்பத்தகாத தகவலடங்கிய தளங் களைப் புறக்கணிக்குமாறும் செய்யமுடியும். இவ்வாறு தளங்களைத் தேர்வு செய்ய வெவ்வேறான தரமதிப்பீட்டு முறைகள் பயன்பாட்டில் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "Pics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1115"}]}}