{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sbqr2cn9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sbqr2cn9/", "kind": "word", "headword": "நந்திக் கலம்பகம்", "romanization": "nantik kalampakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.037333+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன் தமிழ் ஆர்வம் உடையவன். இதனால் புலவர்கள் இவனைப் போற்றினர். இதனைக் கண்டு பொறாமை கொண்ட இவன் தம்பி சித்திரமயன் இவனைக் கொல்ல ஒரு புலவனைச் சரிபடுத்தி அவனை அரம் வைத்துப் பாடிக் கொல்லக் கூறினான். அவ்வாறே புலவன் நச்சு எழுத்துக்கள் அமைய நந்திக் கலம்பகம் என்னும் இந்நூலைப் பாடி நந்திவர்மனை கேட்குமாறு செய்து அவனைக் கொலையுண்ணச் செய்தான். காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 521"}]}}