{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "s6wytn6y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s6wytn6y/", "kind": "word", "headword": "நைட்ரஜன் சுழற்சி", "romanization": "naiṭrajaṉ cuḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:51.795670+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதனை நைட்ரஜன் வட்டம் என்றுங்கூறலாம். கனிமப் பொருள், கரிமப்பொருள் ஆகிய இரண்டின் வழியாக மட்டுமே நைட்ரஜன் உயிரிகளின் உடலுக்குள் செல்லக்கூடியது. நைட்ரஜனைத் தக்கவைக்கும் குச்சியங்கள் (பாக்டீரியா) காற்றுவெளி நைட்ரஜனை நிலைப் புடுத்துகின்றன. இந்த வளியைத் தாவரங்கள், உறிஞ்சிப் புரதம் தொகுக்கின்றன. இதை விலங்குகள் உட்கொள்ளும் பொழுது, அது விலங்குப் புரதமாகின்றது. இறுதியாகத் தாவரங்களும், விலங்குகளும் மடிகின்றபொழுது, அவை எளிய நைட்ரஜன் ஊட்டமுள்ள சேர்மங்களாகச் சிதைகின்றன. நிலக்கரி, மரம் ஆகியவை எரிக்கப்படும் போதும், நைட்ரஜன் காற்று வெளிக்குச் செல்கின்றது. ஆக, உயிர்த் தொகுதிகள் மூலம் நைட்ரஜன் மீண்டும் மீண்டும் சுழல்கிறது. இவ்வாறு பலநிலைகளில் தாவரங்களுக்குக் காற்று வெளி நைட்ரஜன் செல்லுதலும், தாவரங்கள் விலங்குகள் ஆகியவற்றிலிருந்து மீண்டும் நைட்ரஜன் காற்று வெளிக்குச் செல்லுதலுமே நைட்ரஜன் சுழற்சியாகும். இயற்கை நன்கொடைகளில் இதுவும் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "nitrogen cycle", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 293"}]}}