{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rzc86wag", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rzc86wag/", "kind": "article", "headword": "அகன்காகுவா", "romanization": "akaṉkākuvā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.315469+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "1.தென் அமெரிக்காவிலிருக்கும் சிலி நாட்டின் இடைபகுதியிலுள்ள ஒரு மாகாணம்.", "body_ta": "1.தென் அமெரிக்காவிலிருக்கும் சிலி நாட்டின் இடைபகுதியிலுள்ள ஒரு மாகாணம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். ஆயினும் இங்கு மழை மிகக் குறைவாகவே பெய்கிறது. இங்குள்ள பள்ளத்தாக்குக்கள் செழிப்பானவை. திராட்சை முதலிய பழங்களும், காய்கறிகளும் உற்பத்தியாகின்றன. 2. இதே பெயருள்ள அவிந்த எரிமலை சிலிக்கும் அர்ஜெண்டீனாவிற்கும் இடையே ஆண்டீஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது. மேற்கு அர்த்தகோனத்திலேயே இதுதான் மிக உயரமான சிகரம் (23,080 அடி)."}}