{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r3wgpwpd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r3wgpwpd/", "kind": "word", "headword": "மிதவைப் புள்ளி எண்", "romanization": "mitavaip puḷḷi eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.467933+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொடுக் கப்பட்ட ஒர் அடி யெண்ணு (Base) க்கு ஏற்ப, பின்னம் மற்றும் அடுக்கெண் (Mantissa and exponent) ஆகிய இரு பகுதிகளைக் கொண்ட எண் வடிவம். பின்னம், பொதுவாக 0. 1க்கு இடைப்பட்ட எண்ணாக இருக்கும். அதனை, அடியெண் னின்மீது அடுக்கெண்ணை பத்தின் அடுக்காகக் கொண்டு பெருக்கினால் மிதவைப் புள்ளி எண்ணின் மதிப்பு கிடைக்கும் என்பது ஒரு மிதவைப் புள்ளி எண். இதில் 0. 12345 என்பது பின்னம் (mantissa). 10 என்பது அடியெண் (Base). 3 என்பது அடுக்கெண் (Exponent). இதன் மதிப்பு 123. 45 ஆகும். இதே எண்னை என்றும் கூற முடியும். இங்கே புள்ளி இடம் மாறிக் கொண்டே இருப்பதால், மிதவைப் புள்ளி எனப் பெயர் பெற்றது. சாதாரண அறிவியற் குறிமானம் (scientific notation) பத்தினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களைப் பயன்படுத்துகிறது. கணினியில் இரண்டினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களே பொதுவாக புழக்கத்தில் உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "floating point number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 606"}]}}