{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qm46wsef", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qm46wsef/", "kind": "word", "headword": "எதிராளிமேல் மோதுதல்", "romanization": "etirāḷimēl mōtutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:42.889147+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எதிராளி மேல் அநாவசியமாக மோதி ஆடுதல் தவறு என்று விதி முறைகள் விளக்கம் கூறி விளையாட்டைக் கட்டுப்படுத் துகின்றன. அடிக்கும் வட்டத்திற்கு வெளியே எங்கேனும் இதுபோல் மோதித்தள்ளும் தவறு நடந்தால் மோதலுக்கு ஆளான குழு 'தனி அடி' அடிக்கும் வாய்ப்பினைப் பெறுகிறது. அடிக்கும் வட்டத்திற்குள்ளே மோதும் தவறுகள் நடந்தால், தாக்கும் குழு தவறு செய்கிற பொழுது, தடுக்கும் குழுவிற்குத் 'தனி அடி' அடிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். தடுக்கும் குழு தவறிழைத்தால் 'ஒறு நிலை முனை அடி' அல்லது ஒறு நிலைத்தள்ளல் (Penalty hit) என்ற தண்டனைகள் தவறிழைப்பின் தன்மையிலே நடுவரால் கொடுக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "Charging", "period": "", "register": "technical", "domain": "வளைகோல் பந்தாட்டம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 127"}]}}