{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q6q46bn4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q6q46bn4/", "kind": "word", "headword": "நந்தனார் சரித்திரக் கீர்த்தனை", "romanization": "nantaṉār carittirak kīrttaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.014975+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நந்தனாருடைய சரித்திரத்தைக் கீர்த்தனைகளின் மூலம் பாடி அமைத்துள்ள சிறந்த நூல். இதுபோதும் நந்தனார் நாடகம் நடத்துபவர் இதனை அடிப்படையாகக் கொண்டே நடத்துகின்றனர். இதில் அமைந்த கீர்த்தனைகள், செவிக்கு இனிமையுடையனவாய், உருக்கமுடையனவாய் இருக்கின்றன. இதற்கு முதலில் சாத்துகவி கொடுக்க மறுத்த மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களே பின்னர் இதன் கீர்த்தனைகளை இதன் ஆசிரியர் பாடிக் காட்டிய போது உள்ளம் பரவசப்பட்டுச் சாத்துகவி அருளினர் என்று அறியப்படுதலிலிருந்து, இந்நூலின் மாண்பை அறியலாம். இதனைப் பாடியவர் கோபால கிருஷ்ண பாரதியார். காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு. இந்தக் கீர்த்தனையில் கூறப்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 520"}]}}